வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக ஜூவான் குவைடோ

வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக ஜூவான் குவைடோ

by Staff Writer 24-01-2019 | 7:58 AM
Colombo (News 1st) வெனிசூலாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவைடோவை (Juan Guaido) இடைக்கால ஜனாதிபதியாக அங்கீகரிப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேநேரம், பிரேஸில், கொலம்பியா, பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளும், ஜூவான் குவைடோவை வெனிசூலாவின் சட்டரீதியான ஜனாதிபதியாக அங்கீகரித்துள்ளன. வெனிசூலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவின் (Nicolas Maduro) அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் அந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது. வெனிசூலாவின் ஜனாதிபதியாக நிக்கொலஸ் மதுரோ இரண்டாவது தடவையாக, இந்த மாதத்தின் முற்பகுதியில் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.