புளோரிடா வங்கியில் துப்பாக்கிச்சூடு: ஐவர் பலி

புளோரிடா வங்கியில் துப்பாக்கிச்சூடு: ஐவர் பலி

by Chandrasekaram Chandravadani 24-01-2019 | 12:37 PM
அமெரிக்காவின்புளோரிடா மாநிலத்தில் உள்ள வங்கி ஒன்றில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். சேப்ரிங் (Sebring) நகரிலுள்ள சன்ட்ரஸ்ட் (SunTrust) வங்கியிலிருந்து பொலிஸாருக்கு அழைப்பை மேற்கொண்ட நபர் ஒருவர், தான் 5 பேரை சுட்டுவிட்டதாகக் கூறியதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, 21 வயதான ஸெபென் ஸவேர் (Zephen Xaver) என்ற துப்பாக்கிதாரி, சரணடைந்துள்ளதாகவும் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை எனவும் கூறப்படுகின்றது. குறித்த சந்தரப்பத்தில் வங்கிக்குள் ஐவர் மட்டுமே இருந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பயங்கரமான இந்தச் சூட்டுச் சம்பவத்தினால் நிறுவனம் மிகவும் கவலையடைந்துள்ளதாக, சன்ட்ரஸ்ட் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பில் ரொகெர்ஸ் (Bill Rogers) வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், குறித்த துப்பாக்கிதாரி மிக விரையில் முறையான நீதியை சந்திக்க நேரிடும் என, புளோரிடா மாநிலத்தின் ஆளுநர் ரோன் டிசண்டிஸ் (Ron DeSantis) தெரிவித்துள்ளார்.