புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 24-01-2019 | 6:18 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. அரச கணக்காய்வுக் குழுவின் (COPA) தலைவராக லசந்த அழகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார். 02. கொள்ளுப்பிட்டியில் 90 கிலோகிராம் ஹெரோயினுடன் கைதான சந்தேகநபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 03. படைப்புழுவின் தாக்கம் நெற்செய்கையையும் பாதித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 04. முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. 05. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளைப் பயிற்றுவிப்பதற்கு, இரு நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. 06. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வௌிநாட்டுச் செய்திகள் 01. அமெரிக்காவில் நீடிக்கும் பகுதியளவிலான அரசதுறை பணிமுடக்கத்தினை நிறைவுக்குக் கொண்டுவரும் வகையில், செனட் சபையில் வாக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது. 02. நைஜீரியாவில் வேகமாகப் பரவி வரும் லசா காய்ச்சலால் இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர். விளையாட்டுச் செய்திகள் 01. அவுஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று ஆரம்பமாகின்ற முதல் டெஸ்ட் போட்டியில் திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமன்னே ஆகியோரை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறக்க எதிர்பார்த்துள்ளதாக, இலங்கை டெஸ்ட் அணித்தலைவரான தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார். 02. நியூஸிலாந்திற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது.