அமைச்சுகளின் ஆலோசனை தெரிவுக்குழுவை நியமிக்க அனுமதி

கோப் குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஊடகங்கள் இடமளிக்க வேண்டும் - சுனில் ஹந்துந்நெத்தி

by Staff Writer 24-01-2019 | 1:46 PM
Colombo (News 1st) 31 அமைச்சுக்களின் ஆலோசனை தெரிவுக்குழுக்களை நியமிப்பதற்கான பாராளுமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கான பிரேரணை சபைத்தலைவர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது கோப்குழு அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு இறுதி காலப்பகுதியில் நாம் அழைத்திருந்த 17 நிறுவனங்கள் தொடர்பில் தான் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த சபை முறையாக செயற்பட வேண்டும் எனவும் இது தொடர்பில் ஊடகங்களும் உரிய செயற்பாட்டை முன்னெடுக்க இடம் வழங்க வேண்டும் எனவும் என மக்கள் விரும்புகின்றனர். ஶ்ரீலங்கா விமானசேவை முதல் 9 மாதங்களில் 40,000 பில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நஷ்டத்திலுள்ள பல நிறுவனங்கள் உள்ளன. சிறிய சிறிய விடையங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளம் வழங்க முடியாமல், படைப்புழுத் தாக்கத்தைக் கட்டுப்படுத்தமுடியாமல் கோசங்களை எழுப்புகின்றனர். கோடிக் கணக்கில் அரச நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன
என கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துந்நெத்தி தெரிவித்துள்ளார். இந்தநிலையில், அந்த கோப் குழு அறிக்கை தொடர்பில் விரைவில் வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னர் விவாதம் ஒன்றை நாம் கோருகின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
விவாதத்திற்கு தயார். அதனை மறைக்க வேண்டும் என்றால் தலைவர் பதவியை உங்களுக்கு தரமாட்டோம் அல்லவா? அனைத்து அரசாங்கமும் தலைவர் பதவியை ஆளும்கட்சிக்கு தான் வழங்கியது. ஆனால், ரணில் விக்கிரமசிங்க 2000 ஆம் ஆண்டு ஜெயராஜ் பெரனாண்டோபுள்ளையை நியமித்தார். நாங்கள் எதிர்க்கட்சியில் உள்ளவரை நியமித்துள்ளோம். அதற்கு நாம் எதிர்ப்பு வௌியிடவில்லை
என சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.