அமெரிக்காவுடனான உறவு துண்டிப்பு - நிக்கலஸ் மதுரோ

அமெரிக்காவுடனான உறவு துண்டிப்பு - நிக்கலஸ் மதுரோ அறிவிப்பு

by Staff Writer 24-01-2019 | 2:18 PM
அமெரிக்காவுடனான உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக, வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ (Nicolas Maduro) அறிவித்துள்ளார். வெனிசூலாவிலுள்ள அமெரிக்க இராஜதந்திரிகளை அடுத்த 72 மணித்தியாலங்களில் நாட்டைவிட்டு வௌியேறுமாறு அவர் அறிவித்துள்ளார். வெனிசூலாவின் எதிர்க்கட்சித் தலைவர் தன்னை ஜனாதிபதி என அறிவித்தமைக்கு, அமெரிக்கா ஆதரவளித்தமையை அடுத்தே, மதுரோ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். ஆனால், முன்னாள் ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவிற்கு அதிகாரம் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அத்தோடு, பிரேஸில், கொலம்பியா, பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகள் மற்றும் கனடா ஆகியனவும் வெனிசூலாவின் சட்டரீதியான ஜனாதிபதியாக ஜூவான் குவைடோவை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ள அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் புதிய தேர்தலை நடாத்துமாறு வலியுறுத்தியுள்ளது. வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிராகவும் ஜூவான் குவைடோவிற்கு ஆதரவாகவும், மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.