ஸ்ரீ.சு.கட்சியின் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்

by Staff Writer 23-01-2019 | 6:58 AM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு ஜனாதிபதி செயலகத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது. எனினும் பொலன்னறுவை, புத்தளம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கான தலைவர்கள் இதன்போது நியமிக்கப்படவில்லை. 1) கொழும்பு மாவட்டத்திற்கான தலைவர் - திலங்க சுமதிபால 2) கம்பஹா மாவட்டத்திற்கான தலைவர் - லசந்த அழகியவண்ண 3) களுத்துறை மாவட்டத்திற்கான தலைவர் - மஹிந்த சமரசிங்க 4) காலி மாவட்டத்திற்கான தலைவர் - ஷான் விஜேலால் டி சில்வா 5) கண்டி மாவட்டத்திற்கான தலைவர் - எஸ்.வி. திஸாநாயக்க 6) கேகாலை மாவட்டத்திற்கான தலைவர் - ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 7) மாத்தறை மாவட்டத்திற்கான தலைவர் - விஜய தசநாயக்க 8) ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தலைவர் - மஹிந்த அமரவீர 9) குருநாகல் மாவட்டத்திற்கான தலைவர் - தயாசிறி ஜயசேகர 10) பதுளை மாவட்டத்திற்கான தலைவர் - நிமல் சிறிபால டி சில்வா 11) அனுராதபுர மாவட்டத்திற்கான தலைவர் - துமிந்த திசாநாயக்க 12) அம்பாறை மாவட்டத்திற்கான தலைவி - ஶ்ரீயானி விஜேவிக்ரம 13) யாழ். மாவட்டத்திற்கான தலைவர் - அங்கஜன் இராமநாதன் 14) மாத்தளை மாவட்டத்திற்கான தலைவர் - லக்ஸ்மன் வசந்த பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம நியூஸ்பெஸ்டுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் அனைத்து புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்வரும் 3 மாதங்களுக்குள் கிராமங்கள் தோறும் சென்று எதிர்வரும் தேர்தலுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கட்சியைப் பலப்படுத்தவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.