படைப்புழு ஒழிப்பு முறைமைகளைப் பயன்படுத்தத் திட்டம்

படைப்புழு ஒழிப்பு முறைமைகளைப் பயன்படுத்தத் திட்டம்

by Staff Writer 23-01-2019 | 7:05 AM
Colombo (News 1st) படைப்புழுவை ஒழிப்பதற்காக பல்வேறு தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 15 வகையான படைப்புழு ஒழிப்பு முறைமைகளை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, உள்நாட்டு முறைமையினால் படைப்புழுவை ஒழிப்பதற்கு இயலுமானால், அதுவே பாரிய வெற்றி என படைப்புழு ஒழிப்புப் பிரிவின் பிரதானி அநுர விஜேதுங்க குறிப்பிட்டுள்ளார். சுயதயாரிப்பின் மூலம் சில விவசாயிகள், படைப்புழுவை ஒழிப்பதற்கான முறைமைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவற்றினை பரிசோதனைக்குட்படுத்தி, விவசாய காணிகளுக்கு பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் படைப்புழு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. நாட்டின் விவசாயக் காணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள படைப்புழுவை ஒழிப்பதற்கு ஏதேனும் முறைமைகள் காணப்படின், உடனடியாக விவசாயத் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் அநுர விஜேதுங்க மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்காக 5 வகையான கிருமிநாசினிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின்மூலம் படைப்புழு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அநுர விஜேதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்