நெற்செய்கையைும் விட்டுவைக்காத படைப்புழு தாக்கம்

நெற்செய்கையைும் விட்டுவைக்காத படைப்புழுவின் தாக்கம் 

by Staff Writer 23-01-2019 | 1:45 PM
Colombo (News 1st) படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகள் பத்தலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையிலான நிகழ்வு ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. படைப்புழுவின் தாக்கம் சோளம், மரக்கறி செய்கையில் மாத்திரமல்லாது இலங்கையின் பிரதான பயிர்ச்செய்கையான நெற்செய்கையையும் பாதித்துள்ளமையை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெஹியத்தகண்டியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான உயிரினங்கள் சோளம் மற்றும் நெற்செய்கையைப் பாதிக்கும் முறை வித்தியாசமானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பிலான ஆய்வு பத்தலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டதுடன் அது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாங்கள் தெஹியத்தகண்டிக்கு சென்று இது தொடர்பில் ஆராய்ந்தோம். இது வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான ஆய்வினை நாங்கள் முன்னெடுக்க சென்றபோது ஒரு படைப்புழுவையேனும் எம்மால் இனங்காண முடியவில்லை. நாங்கள் இரசாயனக் கொல்லிகளை மாத்திரமே பயன்படுத்துகின்றோம். அது அத்தியாவசியமாகின்றது. இந்த உயிரினங்கள் தொடர்பில் அதிக கவனத்தை செலுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகின்றோம். இது தொடர்பில் ஆரம்பத்தில் நாங்கள் அடையாளம் கண்டால் மணல் மற்றும் சாம்பலைப் பயன்படுத்த முடியும். ஆரம்ப காலங்களில் அவ்வாறே நாங்கள் பயன்படுத்தினோம். ஆரம்பத்திலும் திணைக்களத்தால் இந்த முறையே பரிந்துரைக்கப்பட்டிருந்தது
என பத்தலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பிரதான ஆய்வாளர் சுசந்தி சந்திரசேன தெரிவித்துள்ளார்.