இந்தியக் கடற்படையின் ஒத்திகை ஆரம்பம்

இந்தியக் கடற்படையின் ஒத்திகை ஆரம்பம்

by Staff Writer 23-01-2019 | 7:28 AM
Colombo (News 1st) நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் கண்காணிப்பதற்காக பாரிய கடற்படை ஒத்திகையினை, இந்திய கடற்படை ஆரம்பித்துள்ளது. மும்பையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இவ்வாறான மிகப்பெரிய தாக்குதல்கள் மீண்டும் நடத்தப்படாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தமது முதலாவது பன்முக அமைப்புக்களின் பயிற்சியினை இந்திய கடற்படை ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்குச் சொந்தமான 7,516 கிலோமீற்றர் நீளமான கடற்பிராந்தியங்களில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பிரத்தியேக பொருளாதார வலயங்கள் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் காணப்படும் 13 கரையோர மாநிலங்களும் இந்த நடவடிக்கையின் கீழ் கண்காணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.