by Staff Writer 23-01-2019 | 4:32 PM
அரச கணக்காய்வுக் குழுவின் (COPA) தலைவராக லசந்த அழகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அரச நிறுவனங்களில் ஊழல் முறைகேடுகளை குறைப்பதற்கு பாராளுமன்றத்தின் நேரடி கண்காணிப்பு அவசியம் என அரச கணக்காய்வு குழுவின் தலைவர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
கணக்காய்வுக் குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் துரிதமாக ஊடகங்களுக்கு தௌிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரச கணக்காய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.