சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டேவிட் ஷெபர்ட் விருதை வென்றார் குமார் தர்மசேன

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டேவிட் ஷெபர்ட் விருதை வென்றார் குமார் தர்மசேன

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டேவிட் ஷெபர்ட் விருதை வென்றார் குமார் தர்மசேன

எழுத்தாளர் Bella Dalima

22 Jan, 2019 | 3:33 pm

Colombo (News 1st) 2018 ஆம் ஆண்டின் சிறந்த நடுவராக இலங்கையின் குமார் தர்மசேன சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டேவிட் ஷெபர்ட் விருதை வென்றுள்ளார்.

அவர் இந்த விருதை வெல்லும் தொடர்ச்சியான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

வளர்ந்து வரும் வீரராக இந்தியாவின் ரிஷப் பாண்ட் தெரிவாகியுள்ளார்.

கிரிக்கெட்டின் மகத்துவத்தை பாதுகாத்தமைக்கான விருதுக்காக நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இளம் அணியாக இந்திய இளையோர் அணி தெரிவாகியுள்ளது.

சிறந்த டெஸ்ட் வீரராகவும் சிறந்த ஒருநாள் வீரராகவும் விராட் கோஹ்லி பெயரிடப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்