அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பிலான நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழீழ விடுதலை இயக்கம் நிராகரிப்பு

அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பிலான நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழீழ விடுதலை இயக்கம் நிராகரிப்பு

அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பிலான நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழீழ விடுதலை இயக்கம் நிராகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Jan, 2019 | 5:03 pm

Colombo (News 1st) அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பிலான நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது.

தற்போதைய அரசியல் பின்னணியில் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பிலான நிபுணர் குழுவின் அறிக்கையை கவனமாகவும் நிதானமாகவும் ஆராய்ந்து பார்க்கையில், அதனை நிராகரிப்பதனைத் தவிர வேறு தெரிவு எதுவும் தமக்கு இல்லையென ரெலோ வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தினால் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் வௌிப்படுத்தப்பட்ட நிலைப்பாடுகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்