பதாகைகளை காட்சிப்படுத்தாது ஏன்?

அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான பதாகைகளை காட்சிப்படுத்தாது ஏன்?

by Staff Writer 22-01-2019 | 10:38 PM
Colombo (News 1st) அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பத்தில் குறித்த அபிவிருத்தித் திட்டத்தின் நிதியொதுக்கீடு உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் காட்சிப்படுத்தப்படுவது அவசியமாகும். எனினும், எவ்வித விபரங்களும் இன்றிய நிலையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் ஆராய்ந்தது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கம்பெரலிய திட்டம் உள்ளிட்ட மேலும் பல நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நாடளாவிய ரீதியில் அபிவிருத்திப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிளிநொச்சி மாவட்டத்திலும் கம்பெரலிய திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ​ கிளிநொச்சி மாவட்டத்தில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் அவை எதிலும் குறித்த திட்டம் தொடர்பிலான விபரங்களை உள்ளடக்கக்கூடிய பதாகைகள் காட்சிப்படுத்தப்படாமை தொடர்பில் மக்கள் தமது அதிருப்தியைத் தெரிவித்தனர். காட்சிப் பதாகைகளை அமைப்பதற்காக 6000 ரூபா நிதி ஒதுக்கீடு அபிவிருத்தித் திட்டத்தில் உள்வாங்கப்படுகின்ற போதிலும் அவை காட்சிப்படுத்தப்படாமையின் பின்னணி என்ன? பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் போது அதில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டியது அவசியமல்லவா?