வட்சப் சமூக வலைத்தளத்தில் தகவல் அனுப்புவதற்கு தடை

வட்சப் சமூக வலைத்தளத்தில் தகவல் அனுப்புவதற்குத் தடை

by Staff Writer 21-01-2019 | 10:25 PM
Colombo (News 1st) வட்சப் (WhatsApp) சமூக வலைத்தளத்தில் ஒரே தகவலை 5 தடவைகளுக்கு மேல் அனுப்புவதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. போலியான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வட்சப் குழுமம் இந்த நடவடிக்கையை இந்தியாவில் 6 மாதங்களுக்கு முன்னர் முன்னெடுத்திருந்தது. வட்சப் சமூகவலைத்தளத்தில் ஒரே தகவலை 20 தடவைகளுக்கு மேல் அனுப்பக்கூடிய வகையில் வலைத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய நடைமுறை இந்தோனேஸிய தலைநகர் ஜகார்த்தாவில் வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஸியாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தல் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.