துரத்தும் படைப்புழுவை நிறுத்தும் வேட்டை ஆரம்பம்

துரத்தும் படைப்புழுவை நிறுத்தும் வேட்டை ஆரம்பம்

by Fazlullah Mubarak 21-01-2019 | 8:45 AM

நாட்டின் பல்வேறு பகுதிகளில் படைப்புழு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனை ஒழிப்பதற்காக மாவட்ட மட்டத்தில் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதி பணிப்பாளர் மற்றும் படைப்புழு ஒழிப்பு விசேட பிரிவின் அதிகாரி அநுர விஜேதுங்க குறிப்பிட்டுள்ளார். விவசாய மத்திய குழு, கிராம உத்தியோகத்தர் பிரிவு குழு, மாவட்ட குழு ஆகிய மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்காக 5 வகை கிருமிநாசினிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அநுர விஜேதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை படைப்புளுவின் தாக்கத்தினால், செய்கையாளர்கள் மாத்திரமன்றி வீதியோர வியாபாரிகளும் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் நடவடிக்கை எமுள்ளதாக விவசாய அமைச்சர் பி ஹரிசன் தெரிவித்துள்ளார். செய்கை பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கர ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் கே டி எஸ் ருவன்சந்திர கூறியுள்ளார். செய்கை முழுமையாக பாதிப்படைந்திருப்பின், அதனை தீயிட்டு அழிக்குமாறு விவசாய அமைச்சு பரிந்துரைத்துள்ளது.