எண்ணெய்குதங்களின் பாகங்கள் திருட்டு: அறிக்கை கோரல்

எண்ணெய்க் குதங்களின் பாகங்கள் திருட்டு தொடர்பில் அறிக்கை கோருவதற்கு அமைச்சு நடவடிக்கை

by Staff Writer 20-01-2019 | 1:43 PM
Colombo (News 1st) திருகோணமலை - சீனன்குடா துறைமுகத்திலுள்ள எண்ணெய்க் குதங்களின் பாகங்கள் திருடப்பட்டமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை கோருவதற்கு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அண்மையில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் கீழ் உள்ள எரிபொருள் தாங்கிகளில் இரண்டின் பாகங்கள் திருடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த 12ஆம் திகதி 10 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை, இந்திய நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையின் காணப்படும் சிக்கல்கள் காரணமாக இந்த எண்ணெய் தாங்கிகள் கட்டமைப்பு அழிவடைந்து வருவதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.