by Bella Dalima 19-01-2019 | 5:12 PM
மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளனர்.
மெக்சிகோவில் பெட்ரோல் குழாய்கள் மூலம் எடுத்துச்செல்லப்படுகிறது. ஹிடால்கோ மாகாணத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக்கொண்டிருந்தனர்.
இதன்போது, எதிர்பாராத விதமாக திடீரென பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்தது. அதில் சிக்கி ஏராளமானோர் கருகினர். அவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை ஹிடால்கோ மாகாண ஆளுநர் ஓமர் பயாத் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவில் மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று பெட்ரோலை வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பெட்ரோல் திருட்டு அங்கு அதிகளவில் நடைபெற்று வருகிறது.