இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க பிலிப்பைன்ஸ் ஒத்துழைப்பு: இவ்வாண்டில் முக்கிய தீர்மானங்களை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி

by Staff Writer 19-01-2019 | 7:52 PM
Colombo (News 1st) இலங்கையில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தலை இல்லாதொழிப்பதற்கான ஒத்துழைப்பை பிலிப்பைன்ஸ் வழங்கியுள்ளது. இதற்காக வழங்கக்கூடிய தொழில்நுட்ப ஆலோசனைகள், சேவைகள் தொடர்பில் ஆராய்வதற்கு பிலிப்பைன்ஸ் நாட்டு நிபுணர்கள் குழுவொன்று நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்காக அரச விஜயத்தின் மற்றுமொரு பிரதிபலனாக இந்த ஒத்துழைப்பு கிட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த அரச விஜயத்தின் இறுதி நாளாகிய இன்று, அந்நாட்டு பொலிஸ் தலைமையகத்திற்கு சென்ற ஜனாதிபதி, போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பிலும் ஈடுபட்டார். பிலிப்பைன்ஸின் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, தனது தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் போதைப்பொருளுக்கு எதிரான பகிரங்க போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தொடர்பான சவாலை வெற்றிகொள்வதற்காக இந்த வருடம் சில முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்