ஹரி-மேகனின் குழந்தைக்கு பிரியங்கா சோப்ரா ஞானத்தாய்?

ஹரி-மேகனின் குழந்தைக்கு பிரியங்கா சோப்ரா ஞானத்தாய்?

ஹரி-மேகனின் குழந்தைக்கு பிரியங்கா சோப்ரா ஞானத்தாய்?

எழுத்தாளர் Bella Dalima

19 Jan, 2019 | 5:39 pm

இங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கும் குழந்தைக்கு இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவை ஞானத்தாயாக அமர்த்த பரிசீலித்து வருவதாக அவரது செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹரி (வயது 34) தனது காதலி மேகனை (37) கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி மணந்தார்.

தற்போது இளவரசி மேகன் கர்ப்பமாக உள்ளார். இவருக்கு எதிர்வரும் மே மாதம் பிரசவமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கிறிஸ்தவ மத முறைப்படி குழந்தைக்கு பெயர் சூட்டும் ஞானஸ்நான நிகழ்வின்போது, குழந்தையின் ஞானத்தாய், தந்தையாக யார் இருக்கப்போகிறார்கள் என்ற கேள்வி சூடுபிடித்து வருகிறது.

முதலில் ஹரியின் மூத்த சகோதரர் இளவரசர் வில்லியம், கேத் மிடில்டன் தம்பதியர்தான் இளவரசி மேகன் பெற்றெடுக்கப்போகும் குழந்தையின் ஞானப்பெற்றோர் என கூறப்பட்டது. பின்னர் மேகனின் தோழி ஜெசிகா முல்ரோனியும் அவரது கணவரும் என பேசப்பட்டது. ஆனால், தற்போது மேகன், தனது பிரியத்திற்குரிய தோழியான இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவை ஞானத்தாயாகவும், நிக் ஜோனாஸை ஞானத்தந்தையாகவும் அமர்த்திக்கொள்ள பரிசீலிப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ போல்கே தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இளவரசர் ஹரி, மேகன் திருமணத்தில் பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டிருந்தது நினைவுகூரத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்