2018 பிளாட்டினம் விருது வழங்கும் விழா: சிலாபத்தில் மூன்றாம் நாள் நிகழ்வுகள்

2018 பிளாட்டினம் விருது வழங்கும் விழா: சிலாபத்தில் மூன்றாம் நாள் நிகழ்வுகள்

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2019 | 9:05 pm

Colombo (News 1st) 2018 பிளாட்டினம் விருது வழங்கும் விழாவின் ஊக்குவிப்புத் திட்டத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று சிலாபத்தில் ஆரம்பமாகின.

இலங்கையின் திறமையான விளையாட்டு வீர, வீராங்கனைகளை ஊக்குவிப்பதற்காக ஸ்போட்ஸ்ஃபெஸ்ட் இம்முறையும் பிளாட்டினம் விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

இன்றைய நிகழ்வுகள் சிலாபம் ஆனந்தா தேசிய பாடசாலையில் ஆரம்பமாகின.

இந்த நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் Allianz நிறுவனத்தின் அதிகாரிகளும் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இம்முறை பிளாட்டினம் விருது வழங்கும் விழா மார்ச் 29 ஆம் திகதி இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் நடைபெறவுள்ளது.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை வீர, வீராங்கனைகள் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர்.

உலகின் முன்னணி காப்புறுதி நிறுவனமான Allianz நிறுவனம் இம்முறை பிளாட்டினம் விருதிற்கு அனுசரணை வழங்குகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்