ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2019 | 5:09 pm

Colombo (News 1st) இரண்டு கிராம் 780 மில்லி கிராம் ஹெரோயினை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால், பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.

2015ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் பொரளை – பேஸ்லைன் வீதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இரண்டு குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமானதால், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் வெவ்வேறாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நான்கு பிள்ளைகளின் தாயான 54 வயது பெண்ணொருவருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்