ஹல்துமுல்ல மூலிகைப் பூங்காவை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

ஹல்துமுல்ல மூலிகைப் பூங்காவை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

ஹல்துமுல்ல மூலிகைப் பூங்காவை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2019 | 4:26 pm

Colombo (News 1st) பதுளை – ஹல்துமுல்ல மூலிகைப் பூங்காவை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்திலுள்ள ஹல்துமுல்ல ஒசு உயன எனும் மூலிகைப் பூங்கா 65 ஏக்கர் நிப்பரப்பில் பரந்து காணப்படுகின்றது.

இங்கு அருகி வரும் மூலிகைகள் உள்ளிட்ட 700 வகையான விசேட மூலிகைகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், மூலிகைப் பூங்காவை அமைப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்றுக்கொடுத்தல் , மூலிகை தொடர்பான பிரசுரங்களை விநியோகித்தல், மூலிகைகள் தொடர்பில் தெளிவுபடுத்தல் ஆகிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக 33.4 மில்லியன் ரூபா முதலீட்டுடனான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்