பொலன்னறுவையையும் ஆக்கிரமித்தது படைப்புழு

பொலன்னறுவையையும் ஆக்கிரமித்தது படைப்புழு

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2019 | 7:28 pm

Colombo (News 1st) நாட்டின் சோளப் பயிர்செய்கைகளில் வேகமாகப் பரவி வரும் படைப்புழுவின் தாக்கத்தினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை பாதிக்கப்படாத பொலன்னறுவை மாவட்டத்திலும் படைப்புழுவின் தாக்கம் ஏற்பட்டுள்ளதை மக்கள் சக்தி குழுவினரால் அவதானிக்க முடிந்தது.

பொலன்னறுவை – திம்புலாகல, மகாவலி C வலயத்தின் கஜூவத்த கிராமத்திற்கு இன்று நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் சென்றிருந்த போது, அங்கு படைப்புழுவின் ஆக்கிரமிப்பினை அவதானிக்க முடிந்தது.

அம்பாறை – நாமல் ஓயா கிராமத்தினையும் படைப்புழுவின் தாக்கம் விட்டுவைக்கவில்லை.

ஒலுவில் – அஷ்ரப் நகர், பள்ளக்காடு ஆகிய கிராமங்களிலும் படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு – வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் 63 ஏக்கரில் சோளப் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு ஆலங்குளம்,கோணேசபுரம் போன்ற பகுதிகளிலும் படைப்புழு ஆக்கிரமித்துள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்