ஜனாதிபதி நிதியம் இடமாற்றம்

ஜனாதிபதி நிதியம் இடமாற்றம்

ஜனாதிபதி நிதியம் இடமாற்றம்

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2019 | 3:26 pm

Colombo (News 1st) ஜனாதிபதி நிதியம் இன்று முதல் புதிய கட்டடத்தில் இயங்கவுள்ளது.

மக்களுக்கான சிறந்த சேவைகளை வழங்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலக்கம் 41, ரேணுகா கட்டடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு – 01 என்ற முகவரியில் ஜனாதிபதி நிதியம் இதுவரையில் செயற்பட்டது.

இலக்கம் 35, லேக்ஹவுஸ் கட்டடம், மூன்றாம் மாடி, கொழும்பு – 10 எனும் முகவரியில் நிதியத்தின் செயற்பாடுகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.

புதிய இடத்திற்கு ஜனாதிபதி நிதியம் மாற்றப்படவுள்ளமையால் இன்று சேவைகளை பெற்றுக்கொள்ள செல்வோர் எதிர்நோக்கக்கூடிய அசௌகரியங்களுக்கு வருந்துவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் புதிய கட்டடத்தில் வழமை போல ஆரம்பிக்கப்படவுள்ளன.

011-2331245, 011- 2431610 மற்றும் 011-2382316 ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாக ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்