சீனன்குடா துறைமுக எரிபொருள் தாங்கிகள் திருட்டு: கட்டமைப்பு அழிவடைந்து வருவதாக குற்றச்சாட்டு

சீனன்குடா துறைமுக எரிபொருள் தாங்கிகள் திருட்டு: கட்டமைப்பு அழிவடைந்து வருவதாக குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2019 | 7:50 pm

Colombo (News 1st) திருகோணமலை – சீனன்குடா துறைமுகத்தில் எரிபொருள் தாங்கி பிரிவில் சில தாங்கிகள் திருடப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

லங்கா IOC நிறுவனத்தின் கீழ் உள்ள இந்த எரிபொருள் தாங்கிகளில் இரண்டின் பாகங்கள் திருடப்பட்டுள்ளன.

அத்துடன், பல தாங்கிகளில் விநியோகக்குழாயின் சில பாகங்களும் திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் 10 சந்தேகநபர்கள் சீனக்குடா துறைமுக பொலிஸாரால் கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கை, இந்திய நிறுவனத்துடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையில் காணப்படும் சிக்கல்கள் காரணமாக இந்த எண்ணெய் தாங்கி கட்டமைப்பு அழிவடைந்து வருவதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்