எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்தார் மஹிந்த ராஜபக்ஸ

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்தார் மஹிந்த ராஜபக்ஸ

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2019 | 3:51 pm

Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

ஶ்ரீமத் மாகஸ் பெர்ணாந்து மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு மஹிந்த ராஜபக்ஸ தனது கடமைகளை ஆரம்பித்தார்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, தற்போது, வெற்றிடமாகக் காணப்படும் எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் பதவிக்கு, இலங்கை நிர்வாக சேவையில் உயர்தரத்தை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் பெயர் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸவின் பிரத்தியேக செயலாளர் உதித் லொக்குபண்டார குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்