அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2019 | 3:18 pm

Colombo (News 1st) அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கான தலைமை அதிகாரிகள் நியமிக்கப்படாமையால், அவற்றின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபைக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட பெயர் விபரம் இதுவரை குறித்த அமைச்சுகளுக்கு கிடைக்காமையால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை நியமிப்பதற்கான பெயர் விபரம் ஜனாதிபதியின் அனுமதியைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச நிறுவனங்களின் தலைவர்களை நியமிப்பதற்கு தகுதி வாய்ந்தவர்களை தெரிவு செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

எவ்வாறாயினும், அடுத்த வாரத்திற்குள் அரச நிறுவனங்களுக்கான தலைமை அதிகாரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்