அக்கரைப்பற்று மாநகர சபை பிரதி மேயர் பிணையில் விடுவிப்பு

அக்கரைப்பற்று மாநகர சபை பிரதி மேயர் பிணையில் விடுவிப்பு

அக்கரைப்பற்று மாநகர சபை பிரதி மேயர் பிணையில் விடுவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

18 Jan, 2019 | 3:13 pm

Colombo (News 1st) பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபை பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் தகவல்களை வழங்கிய சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறியமை தொடர்பிலேயே அவரை கைது செய்யுமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்த பிடியாணைக்கு அமைய, மருதானையிலுள்ள விழா மண்டபம் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்