பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை

8 அடி தடுப்புச் சுவரைத் தாண்டி பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய 17 அடி முதலை

by Bella Dalima 17-01-2019 | 4:20 PM
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி நகரில் பெண் ஆராய்ச்சியாளர் உணவு கொடுக்கச் சென்றபோது, 17 அடி நீளமுள்ள முதலை ஒன்று அவரை உயிருடன் விழுங்கிய சம்பவம் நடந்துள்ளது. வடக்கு சுலவேசி நகரில் சி.வி.யோசிகி முதலை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் டீசி டுவோ (44) என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணியாற்றி வந்தார். அந்த பண்ணையில் மெரி என்ற முதலை வளர்க்கப்பட்டு வந்தது. இந்த முதலை 17 அடி நீளம் கொண்டது. இது மனிதர்களைத் தாக்கும் தன்மை கொண்டதால், 8 அடி தடுப்புச்சுவற்றுக்குள் வளர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த முதலைக்கு நேற்று முன்தினம் டீசி டுவோ வழக்கம் போல் மாமிச உணவுகளை அளிக்கச் சென்றார். அப்போது திடீரென 8 அடி தடுப்புச்சுவரை மீறி பாய்ந்த முதலை, டுவோவின் கைகளைப் பற்றி இழுத்துச் சென்றது. டுவோவின் அலறல் சத்தத்தைக் கேட்ட அவரின் தோழி வந்து பார்க்கையில், டுவோவை முதலை இழுத்துச் செல்வதை அறிந்து அலறித் துடித்தார். உடனடியாக ஆராய்ச்சி மையத்தில் இருந்தவர்களிடமும் பொலிஸாருக்கும் தகவல் அளித்தார். அதன்பின் பொலிஸாரும், மீட்புப்படையினரும், விரைந்து வந்து மெரி முதலையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்டநேர போராட்டத்திற்குப் பின் முதலையைப் பிடித்தனர். முதலையை ஆய்வு செய்ததில், மனித உடல் பாகங்களை சாப்பிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.