அனைத்து வாகனங்களுக்கும் கார்பன் வரி அமுல்

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் தவிர்ந்த அனைத்து வாகனங்களுக்கும் கார்பன் வரி அமுல்

by Staff Writer 17-01-2019 | 4:34 PM
Colombo (News 1st) மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் தவிர்ந்த, அரசாங்க வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் கார்பன் வரி அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதம் முதல் கார்பன் வரி அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க வாகனங்கள் கார்பன் வரியில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனவும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. அனைத்து மோட்டார் வாகனங்களும் பதிவு செய்யப்பட்டு முதல் வருடம் தவிர்ந்த ஏனைய வருடங்களில் வருடாந்தம் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் புதுப்பிக்கப்படும் போது கார்பன் வரி அறவிடப்படும் எனவும் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.