by Staff Writer 17-01-2019 | 5:09 PM
Colombo (News 1st) இந்த வருடத்தில் இரண்டு சந்திர கிரகணங்களும் மூன்று சூரிய கிரகணங்களும் உலக மக்களுக்கு தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
மே மாதம் 21 ஆம் திகதி மற்றும் ஜூலை மாதம் 16 ஆம் திகதிகளில் சந்திர கிரகணம் தென்படும் என அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் முதலாவது சூரிய கிரகணம் கடந்த 6 ஆம் திகதி தென்பட்டுள்ளதுடன், ஜூலை மாதம் 02 ஆம் திகதி மற்றும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதிகளிலும் சூரிய கிரகணங்கள் தென்படும்.
இதில் எதிர்வரும் ஜூலை மாதம் 16 ஆம் திகதி உருவாகும் சந்திர கிரகணத்தில் அரைவாசியையும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தோன்றும் சூரிய கிரகணத்தையும் இலங்கையர்களால் காணக்கூடியதாக இருக்கும்.
டிசம்பர் மாதம் உருவாகும் சூரிய கிரகணத்தை யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையான பகுதிகளில் வாழும் மக்களால் முற்றாக அவதானிக்க முடியும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.