நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லா வித்தியாலயத்தின் லசின் குரூஸ் புள்ளேக்கு பிளாட்டினம் தங்க விருது

நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லா வித்தியாலயத்தின் லசின் குரூஸ் புள்ளேக்கு பிளாட்டினம் தங்க விருது

எழுத்தாளர் Staff Writer

17 Jan, 2019 | 8:55 pm

Colombo (News 1st) நாடு பூராகவும் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் ஸ்போர்ட்ஸ்ஃபெஸ்ட் பிளாட்டினம் விருது வழங்கலின் ஊக்குவிப்பு பவனியின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.

கம்பஹா மாவட்டத்தில் இன்றைய பவனி முன்னெடுக்கப்பட்டது.

கம்பஹா மாவட்டத்தின் ஊக்குவிப்புத் திட்டம், கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் இன்று காலை ஆரம்பமானது.

கல்வி அதிகாரிகள், Alliance Insurance நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள், கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

உலகின் முன்னணி காப்புறுதி நிறுவனமான Alliance நிறுவனம் இம்முறை பிளாட்டினம் விருதிற்கு அனுசரணை வழங்குகின்றது.

கம்பஹா மாவட்டத்தின் சிறந்த வீரருக்கான பிளாட்டினம் தங்க விருது நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லா வித்தியாலயத்தின் கிரிக்கெட் வீரர் லசின் குரூஸ் புள்ளேக்கு வழங்கப்பட்டது.

இதன் பின்னர், பிளாட்டினம் ஊக்குவிப்பு பவனி சிலாபம் நகரை சென்றடைந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்