மஹிந்தவின் மனு தொடர்பில் உயர் நீதிமன்றில் விசாரணை

மஹிந்தவின் மனு தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் விசாரணை

by Staff Writer 16-01-2019 | 3:16 PM
Colombo (News 1st) பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை பொறுப்புகளிலிருந்து விலக்கியமைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதம நீதியரசர் நலின் பெரேரா மற்றும் நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, L.T.B. தெஹிதெனிய ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பேரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மீளப்பெற்றுக்கொள்வதா, இல்லையா என்பது குறித்து ஆலோசனை பெற்றுக்கொண்டதன் பின்னர் அது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என பிரதிவாதிகள் தரப்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் மன்றில் இன்று அறிவித்தனர். அதற்கமைய, எதிர்வரும் பெவ்ரவரி மாதம் 6 ஆம் திகதி வரை மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.