நைரோபி ஹோட்டல் தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு

நைரோபி ஹோட்டல் தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 16-01-2019 | 8:35 AM
கென்ய தலைநகர் நைரோபியிலுள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றுக்குள், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். DusitD2 என்ற குறித்த ஹோட்டலுக்குள் சிலர் நுழைந்ததைத் தொடர்ந்து, அங்கு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் வெடிப்புச் சத்தங்களும் கேட்டுள்ளன. அதேநேரம், இந்தச் சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ள போதிலும், உத்தியோகபூர்வமாக பலியானவர்களின் எண்ணிக்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்படவில்லை. இதேவேளை, இந்தத் தாக்குதலுக்கு சோமாலியாவில் இயங்கும் அல் ஷபாப் தீவிரவாத குழு பொறுப்பேற்றுள்ளது. எவ்வாறாயினும், தற்போது அனைத்து கட்டடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சோமாலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பிலான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வௌிவரவில்லை.