கிரிக்கெட் பேரவைக்கு புதிய நிறைவேற்று அதிகாரி

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு

by Bella Dalima 16-01-2019 | 9:20 PM
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் (Shashank Manohar) பெயரிடப்பட்டுள்ளார். இதுவரை காலமும் சர்வதேச கிரிக்கட் பேரவையின் நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்ட டேவிட் ரிச்சர்ட்சனின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளமையை அடுத்து, அந்தப் பதவிக்கு ஷஷாங்க் மனோகர் பெயரிடப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் பின்னர், டேவிட் ரிச்சர்ட்சனின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது. இதனிடையே, ஷஷாங்க் மனோகர் அடுத்த மாதம் முதல் தம்முடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது. இந்தியாவின் நாக்பூரில் பிறந்த 61 வயதான ஷஷாங்க் மனோகர் சட்டத்தரணியாவார். இவர் இரண்டு முறை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராகவும் செயற்பட்டுள்ளதுடன், கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையில் சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.