எரிபொருள் விலைச்சூத்திரத்தை வௌியிடுமாறு கோரிக்கை

எரிபொருள் விலைச்சூத்திரத்தை வௌியிடுமாறு கோரிக்கை

by Staff Writer 16-01-2019 | 1:35 PM
Colombo (News1st) காபன் வரி மற்றும் எரிபொருள் விலைச்சூத்திரத்தை வௌியிடுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது,
காபன் வரி மற்றும் எரிபொருள் விலைச்சூத்திரத்தை வௌியிடுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எரிபொருள் என்பது அத்தியாவசியப் பாவனையாக உள்ளமையால் 6 மாதங்களுக்காவது நிர்ணயிக்கப்பட்ட, தளம்பலடையாத விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் மாதத்திற்கு மாதம் விலையில் மாற்றம் ஏற்படுமாயின் இது பாரிய அதிருப்தியைத் தோற்றுவிக்கும். இது தொடர்பிலான விளக்கம் இல்லாத நிலையில் பாரிய சமூக எதிர்ப்பு உருவாகும். டீசலின் விலை 2 ரூபாவால் குறைவடைந்துள்ள நிலையில், பஸ் கட்டணம் குறைவடைந்துள்ளதா அப்பத்தின் விலை குறைவடைந்துள்ளதா, மாறாக அரசாங்கத்திற்கு நாளொன்றிற்கு 200 இலட்சம் ரூபா நட்டமே ஏற்படுகின்றது. யார் இதற்கான அனுமதியை வழங்கியது. விலையை 2 ரூபாயால் குறைத்தால், வீதியில் இறங்கி எங்களால் செல்ல முடியவில்லை, பஸ் கட்டணத்தை குறைக்கவில்லையா என மக்கள் கேட்கின்றனர். 2 ரூபாய்க்கு பஸ் கட்டணத்தைக் குறைக்க முடியுமா? அதனால் தான் இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என அரசாங்கத்திடம் நாங்கள் கோருகின்றோம்
என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.