ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2019 | 10:44 am

Colombo (News1st) பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

தற்போது ​வெற்றிடமாகியுள்ள தொகுதிகளுக்கான புதிய அமைப்பாளர்களை, ஜனாதிபதி நியமிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மாவட்ட அமைப்பாளர்களாக செயற்படுவோரும் தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களாக செயற்படும் சிலர் குறித்து ஜனாதிபதி சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சுட்டக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்