English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
16 Jan, 2019 | 7:34 pm
Colombo (News 1st) பிலிப்பைன்ஸிற்கு நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேர்டேவை (Rodrigo Duterte) சந்தித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையில் இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (15) இரவு மணிலா விமான நிலையத்தை அடைந்த போது, அந்நாட்டு வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேர்டேயின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த உத்தியோகப்பூர்வ சந்திப்பின் போது ஐந்து உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பாதுகாப்பு, சுற்றுலா, விவசாயம் மற்றும் கல்வி ஒத்திழைப்பை மேம்படுத்தும் வகையில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இரண்டு நாடுகளுக்கும் நன்மை கிட்டும் வகையில், உறவுகளை பலப்படுத்துவது தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், பிலிப்பைன்ஸ் தூதரகமொன்றை கொழும்பில் ஸ்தாபிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார வர்த்தக உறவுகளை புதிய திட்டங்கள் மூலம் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பொருளாதார சபையொன்றை உருவாக்குவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் பிலிப்பைன்ஸின் தேசிய வீரர்களை நினைவுகூரும் நினைவுத்தூபிக்கு சென்று மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.
12 May, 2022 | 11:23 AM
12 Apr, 2022 | 04:05 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS