ஜல்லிக்கட்டைப் போல விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும்: அதுல்யா வேண்டுகோள்

ஜல்லிக்கட்டைப் போல விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும்: அதுல்யா வேண்டுகோள்

ஜல்லிக்கட்டைப் போல விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும்: அதுல்யா வேண்டுகோள்

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2019 | 4:47 pm

தமிழர்களின் கலாசாரமான ஜல்லிக்கட்டைக் காப்பாற்றிவிட்டோம், அதுபோல விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும் என நடிகை அதுல்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் பொங்கல் வாழ்த்துக்கூறி வௌியிட்டுள்ள வீடியோவில் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது,

பொங்கல் என்றாலே ஞாபகத்திற்கு வருவது கரும்பும் சர்க்கரைப் பொங்கலும்தான். அது மட்டும் பொங்கல் கிடையாது. உழவர் திருநாள், ஜல்லிக்கட்டு என எல்லாவற்றையும் சேர்த்துத்தான் பொங்கலைக் கொண்டாடுகிறோம். நம் கலாசாரத்தைக் காப்பாற்றுவது ஜல்லிக்கட்டு. அதை நாம் காப்பாற்றிவிட்டோம். அதேபோல, விவசாயிகளையும் நாம் காப்பாற்ற வேண்டும். இந்த வருடம் நம்முடைய விவசாய நிலங்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளன. அவையெல்லாம் சீக்கிரம் சரியாகி, நிறைய மழை பெய்து, பொங்கல் திருநாளிலிருந்து நமக்கு நல்ல காலம் வர வேண்டும் என நான் வேண்டிக்கொள்கிறேன்.

என்று கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்