சுற்றுலாப் பயணிகளின் வருகை வீதம் அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை வீதம் அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை வீதம் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2019 | 10:14 am

Colombo (News1st) கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பைக் காட்டுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் 23,33,796 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், இது 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.3 வீத அதிகரிப்பு எனக் கூறப்படுகின்றது.

இதேவேளை, சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்துக்காக இலங்கையின் சுற்றுலாத் தளங்களை சர்வதேச ரீதியில் பிரபல்யப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்