ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்ஸ் பயணம்

by Staff Writer 15-01-2019 | 3:57 PM
Colombo (News 1st) ஐந்து நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிலிப்பைன்ஸ் பயணித்தார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேர்டேயின் (Rodrigo Duterte) விசேட அழைப்பிற்கிணங்க ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் விஜயம் அமைந்துள்ளது. இதன்போது ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கும் இடையில் நாளைய தினம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மணிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கும் செல்லவுள்ளார். 1978 ஆம் ஆண்டிற்கு பின்னர் நாட்டின் அரச தலைவர் ஒருவருக்கு பிலிப்பைன்ஸிற்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட முதற்சந்தர்ப்பம் இதுவாகும்.