ஆஸிக்கு எதிரான தொடரை சமப்படுத்தியது இந்தியா

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 2 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்தியா 6 விக்கட்களால் வெற்றி

by Staff Writer 15-01-2019 | 5:47 PM
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 6 விக்கட்களால் வெற்றி பெற்றது. அடிலெய்டியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி, அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்களை இழந்து 298 ஓட்டங்களைப் பெற்றது. அவுஸ்திரேலிய அணி சார்பில் ஷோன் மார்ஷ் 131 ஓட்டங்களையும், க்ளென் மெக்ஸ்வெல் 48 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் 4 விக்கட்களையும் மொஹமட் சமி 3 விக்கட்களையும் வீழ்த்தினர். 299 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய இந்திய அணி 49.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அணி சார்பில் அணித்தலைவர் விராட் கோஹ்லி 104 ஓட்டங்களையும் மகேந்திரசிங் தோனி ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் பெற்றனர். இதனடிப்படையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1- 1 என சமநிலையானது. போட்டியின் நாயகனாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.