யாழ்ப்பாணத்தில் சக்தி FM, சக்தி TV-யின் தைப்பொங்கல் விழா

யாழ்ப்பாணத்தில் சக்தி FM, சக்தி TV-யின் தைப்பொங்கல் விழா

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2019 | 4:59 pm

Colombo (News 1st) சக்தி FM, சக்தி TV-யின் தைப்பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றது.

கொக்குவில்லில் அமைக்கப்பட்டுள்ள சக்தி FM, சக்தி TV மற்றும் நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய அலுவலகமும் இன்று திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் – வண்ணை அருள்மிகு வீரமாகாளியம்மன் கோவில் முன்றலில் இன்று அதிகாலை பொங்கல் பொங்கி, விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து பாராம்பரியத்தை பறைசாற்றும் வகையில், வீரமாகாளியம்மன் கோவிலிலிருந்து கே.கே.எஸ் வீதியூடாக மாட்டு வண்டியில் யாழ். நகரூடாக சஞ்சரித்த வண்ணம், வணக்கம் தாயகம் நிகழ்ச்சி நேரடியாக ஒலிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் சக்தி FM, சக்தி TV-யின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் பட்டத் திருவிழாவும் இடம்பெற்றது.

சக்தி FM, சக்தி TV-யின் அனுசரணையுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில், காங்கேசன்துறை மணிக்கூட்டு கோபுரத்தை அண்மித்த பகுதியில் பட்டத்திருவிழா இடம்பெற்றது.

பட்டத் திருவிழாவைக் கண்டுகழிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

சக்தி FM, சக்தி TV-யின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று மாலை பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்