தேசிய சரணாலயங்களுக்கான அனுமதிச்சீட்டுகளை இன்று முதல் இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்

தேசிய சரணாலயங்களுக்கான அனுமதிச்சீட்டுகளை இன்று முதல் இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்

தேசிய சரணாலயங்களுக்கான அனுமதிச்சீட்டுகளை இன்று முதல் இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2019 | 4:11 pm

Colombo (News 1st) தேசிய சரணாலயங்களுக்கு செல்வதற்கான அனுமதிச்சீட்டுகளை இன்று முதல் இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக வில்பத்து தேசிய சரணாலயத்திற்கான அனுமதிச்சீட்டுகள் இன்று வழங்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிரகாரம், வில்பத்து தேசிய சரணாயலத்திற்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள், இணையத்தளமூடாக அனுமதிச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சுற்றுலா செல்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இணையத்தளமூடாக தமது அனுமதிச்சீட்டுகளை பயணிகள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

www.dwc.gov.lk எனும் இணையத்தள முகவரியூடாக அனுமதிச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்