10 மாதங்களில் 311 யானைகள் பலி

10 மாதங்களில் 311 யானைகள் பலி

10 மாதங்களில் 311 யானைகள் பலி

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2019 | 2:48 pm

கடந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 311 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

குறித்த காலப்பகுதிக்கள் காட்டு யானைகள் தாக்கி 95 பேர் உயிரிழந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மனித செயற்பாட்டினாலேயே, அதிக யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை உயிரிழந்த யானைகளில் 48 யானைகள், துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளன.

அத்துடன் 29 யானைகள் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

திணைக்களத்தின் தரவுகளின் பிரகாரம், 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் வரை ஆயிரத்து 445 யானைகள் உயிரிழந்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்