விமலின் வழக்கு ஒத்தி​வைப்பு

விமலின் வழக்கு ஒத்தி​வைப்பு

by Staff Writer 14-01-2019 | 2:33 PM

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதன்போதே இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதற்கான உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார். பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அவரது வங்கி கணக்கு அறிக்கைகள் பெறப்பட்ட கனணி கட்டமைப்புக்கள் பிரவேசிப்பதற்கு பிரதிவாதியின் பிரதிநிதிகள் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குமாறும் நீதிபதி தனியார் வங்கியொன்றுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். விமல் வீரவங்ச, அமைச்சராக கடமையாற்றிய 6 வருடங்களில் அவரது வருமானத்திற்கு மேலதிகமாக சுமார் 75 மில்லியன் ரூபாவை சம்பாதித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்ைக தாக்கல் செய்துள்ளது.