பொலிஸ் மாஅதிபர் பூஜிதவுக்கும் விசாரணை

பொலிஸ் மாஅதிபர் பூஜிதவுக்கும் விசாரணை

by Staff Writer 14-01-2019 | 2:38 PM

பொலிஸ்மா அதிபர் பூசித் ஜயசுந்தர, இன்று அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

குரல் பதிவொன்றை பெற்றுக் கொள்வற்காக பொலிஸ் மாஅதிபர் , அழைக்கப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரியனந்த வெலிஅங்க தெரிவித்துள்ளார். பிரமுகர் கொலை சதித்திட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக, குரல் பதிவை பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டதற்கமையவே பொலிஸ்மா அதிபர் இன்று அழைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார் ஊழலுக்கு எதிரான படயைணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார மற்றும் அந்த குற்றச்சாட்டுக்காக சந்தேகநபராக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆகியோருடைய தொலைபேசி கலந்துரையாடலில் பொலிஸ் மாஅதிபரின் குரல் இருக்கின்றதா என்பது தொடர்பில ஆராய்வதற்காகவே பொலிஸ் மாஅதிபரின் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான படயைணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரின் குரல் மாதரிகிள் இதற்கு முன் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது அவர்களது குரல்களும் தொலைபேசி உரையாடலில் இருந்த குரல்களும் ஒன்று என்பது உறுதி செய்யப்பட்டது.

ஏனைய செய்திகள்