பிரித்தானியாவுக்கு என்ன நேரும் - தெரேசா மே

பிரித்தானியாவுக்கு என்ன நேரும் - தெரேசா மே

by Staff Writer 14-01-2019 | 2:50 PM

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை ஆதரிப்பதில் தோல்வியடைந்தமை பிரிட்டனுக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என அந்நாட்டு பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தம் தொடர்பான வாக்கெடுப்பு கடந்த செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமையானது பிரிட்டன் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை உலகலவில் தோற்றுவிக்க காரணமாக அமைந்ததெனவும் இது பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் எதிர்கால சந்ததியினருக்கு சில தகவல்களை வழங்குவதற்கு வழி கோலுவதாக அமையும் எனவும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார். "நீங்கள் உங்கள் வழிமுறைகளை வழங்கியுள்ளீர்கள், இப்போது உங்களுக்காக நாங்கள் செயற்பட வேண்டியுள்ளது'' என பிரித்தானிய நாழிதல் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார். Brexit உடன்படிக்கை நிராகரிக்கப்படுவது பேரழிவுகரமான மற்றும் மன்னிக்க முடியாததாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.