கடலில் கிடைத்த கருப்பு பெட்டி

கடலில் கிடைத்த கருப்பு பெட்டி

கடலில் கிடைத்த கருப்பு பெட்டி

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2019 | 2:53 pm

கடந்த ஒக்டோபர் மாதம் ஜகார்த்தா கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் மேற்கு நகரமான பங்கல் பினாங்கிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் JT610 எனும் இலக்கமுடைய குறித்த விமானம் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

இதன்போது அதில் பயணித்த விமானப்பணியாளர்கள் உள்ளிட்ட 189 பேரும் உயிரிழந்திருந்தனர்.

விமானம் புறப்பட்ட பின்னர் அதனை மீள திருப்புவதற்கான அனுமதியினை, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களிடம் விமானி கோரிய போதிலும் சிறிது ​நேரத்தில் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

தொழிநுட்பக் கோளாறு காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளானதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்