உண்மையை அடக்க முயற்சி – சுதர்ஷனி

உண்மையை அடக்க முயற்சி – சுதர்ஷனி

உண்மையை அடக்க முயற்சி – சுதர்ஷனி

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2019 | 2:42 pm

பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே கடான பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் நேற்று ஊடக அடக்குமுறை தொடர்பில் தனது நிலைப்பாட்டை வௌியிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கருத்து தெரிவித்திருந்தார்.

”பிரதமர் தற்போது கருப்பு மற்றும் வௌ்ளை ஊடகம் என்று சொல்லுகிறார்.வௌ்ளை ஊடகம் என்றால் ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாக செயற்படும் ஊடகமா? உண்மையை வௌியில் கொண்டுவரும் ஊடகத்தையா கருப்பு ஊடகம் என்பது.? மக்களுக்கு உண்மையாக செய்தியை வழங்கும் ஊடக நிறுவனத்திற்கு முன்னாள் சென்று முகங்களை கருப்பு துணியால் கட்டி கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக செயற்படாத ஊடகங்களை ஒடுக்குவதற்கே முயற்சிக்கின்றனர்.” என இதன்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்